News February 17, 2025
தவசிமேடை ஜல்லிக்கட்டு போட்டியில் 39 பேர் காயம்

சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் 8, காளைகளின் உரிமையாளர்கள் 21, பார்வையாளர்கள் 7 மற்றும் உள்ளூர் பாதுகாப்பு குழு வீரர் 3 உட்பட 39 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 5 நபர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 8, 2026
வடமதுரை அருகே விபத்து; ஒருவர் பலி!

வடமதுரை பகுதியை சேர்ந்த வசந்த் (21) நேற்று முன்தினம் நேரு (21) என்பவருடன் டூவீலரில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அடையாளம் தெரியாத முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த அந்த முதியவர் உயிரிழந்தார். காயமடைந்த வசந்த், நேரு ஆகியோர் திண்டுக்கல் GH-ல் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்
News March 8, 2026
திண்டுக்கல்: இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டாஸ்!

கள்ளிமந்தயம் பகுதியில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்திய வழக்கில் மதுரை பேரையூர் சேர்ந்த நாகஅர்ஜுன் (26) கைது செய்யப்பட்டார். எரியோடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் வேடசந்தூர் பாகாநத்தத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (33) கைது செய்யப்பட்டார். இவர்களின் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்பி பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சரவணன் உத்தரவின்படி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
News March 8, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


