News February 17, 2025
கனவில் இதையெல்லாம் பார்க்கிறீர்களா?

நாம் காணும் கனவு நிஜ வாழ்க்கையில் சிலவற்றை உணர்த்தி செல்வதாக நம்பப்படுகிறது. *யானையை பார்த்தால் உங்களுக்கு துணிச்சல் வரப்போகிறது *பாம்பு வந்தால் ஆபத்தையும், அதே நேரத்தில் பாம்பு தீண்டினால் பண வரவை குறிக்கிறதாம். *திருமணம் ஆவதாக வந்தால் அதிர்ஷ்டமாம். *சிறுநீர் (அ) மலம் கழிப்பது போல கனவு வந்தால் நீண்டகால பிரச்சினை நீங்கப்போவதாக அர்த்தமாம். *நிலவை பார்த்தால், திடீர் அதிர்ஷ்ட காற்று வீசப் போகிறது.
Similar News
News March 5, 2026
BREAKING: பள்ளிகளில் தடை.. தமிழக அரசு உத்தரவு

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து TN அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், பிரிவினைகளை தூண்டும் நிகழ்ச்சி, கல்வி நோக்கத்திற்கு தொடர்பில்லாத நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தனியார் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 5, 2026
வானதி சீனிவாசனுக்கு சீட் மறுக்கப்படுகிறதா?

பாஜகவில் சிட்டிங் MLA உள்பட முக்கியமான சிலருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வானதி சீனிவாசன், வினோஜ் பி.செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோருக்கு சீட் கிடைக்காது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இளைஞர்கள் & புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News March 5, 2026
மக்களுக்கு காவல்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

தெரியாதவர்களிடம் ஆன்லைனில் பழக வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை மக்களை எச்சரித்துள்ளது. காதல் வலையை வீசி உங்களை ஹனி ட்ராப்பில் சிக்க வைக்கலாம் என சுட்டிக்காட்டி, ஆன்லைனில் தெரியாதவர்களிடம் பர்சனல் போட்டோவை பகிர்வதையும், வீடியோ காலில் பேசுவதையும் கண்டிப்பாக தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், ஏமாற்றமடைந்தவர்கள் ‘1930’ என்ற அவசர எண்ணில் உதவி கோரவும் தெரிவித்துள்ளது. SHARE IT.


