News February 16, 2025
பத்திரப்பதிவு அலுலவகங்களில் நாளை கூடுதல் டோக்கன்

சுபமுகூர்த்த நாட்களில் நிலம், சொத்து தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய பலரும் விரும்புவார்கள். இதனால் அன்றைய தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகளும் நடைபெறும். அதன்படி, நாளை (பிப்.17) சுபமுகூர்த்த தினம் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மேலும் ₹3,000 உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ₹12,000 வழங்கிவரும் நிலையில், தற்போது 15,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகார அடையாள அட்டை உள்ளவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் எனவும், வீட்டு வசதி வாரியத்தில் பத்திரிகையாளர்களுக்கு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News March 13, 2026
ஜெ.வின் மறைவுக்கு பிறகு..

Ex CM ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும், விலகியவர்களும் அரை டஜனுக்கு மேல் இயக்கங்கள், கட்சிகளை தொடங்கியுள்ளனர். பண்ருட்டி ராமசந்திரன், பெங்களூரு புகழேந்தியை தொடர்ந்து சசிகலாவும் தனி இயக்கம் கண்டுள்ளார். MGR-ஐ பின்பற்றி தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சியில் (அஇபுதமமுக) இணைந்துள்ளார். அந்த இயக்கங்கள் & கட்சிகளின் விவரங்களை SWIPE செய்து பார்க்கவும்.
News March 13, 2026
56 வயதில் 22 மனைவிகள்.. பலே ஆசாமி

கேரளாவில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட பாகுலேயன்(56) என்பவர் போலீசிடம் சிக்கியபோது, அவர் 22 பெண்களை திருமணம் செய்து மோசடி மன்னனாக வாழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவரை திருமணம் செய்திருந்த பாகுலேயன், மனைவிகளுக்கு நகை வாங்கி கொடுத்து திருப்திப்படுத்த திருட்டில் ஈடுபட்டராம். பல பெயர்களில் பல பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இவரை என்ன சொல்வது?


