News February 16, 2025

திருமணமான 4 மாதத்தில் வாலிபர் விபத்தில் பலி

image

திருவட்டாறு, ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஜோ டேவிஸ் (29). இவர் குழித்துறை சந்திப்பில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். 4 மாதம் முன்பு திருமணம் நடந்து, மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இன்று காலை மனைவி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் செல்லும் போது, பயணம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியில் மோதி உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News

News March 5, 2026

குமரி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

image

குமரியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது இந்த <>லிங்க <<>>மூலம் செயலியில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்யவேண்டும். ஒரு வாரத்தில் பட்டா ரெடியாகும்.தகவலை SHARE பண்ணி உதவுங்க.

News March 5, 2026

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை குமரி வருகை

image

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (6ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4 மணிக்கு அவருக்கு நாகர்கோவிலில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. 5 மணிக்கு கல்லடி மாமூடு பகுதியில் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுடன் கலந்துரையாடுகிறார். 6 மணிக்கு குளச்சலில் கலைஞர் நூலகத்தை திறந்து வைக்கிறார்.இரவு 7 இறச்சகுளம் பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்கிறார். பின்னர் நெல்லை செல்கிறார்.

News March 5, 2026

நாகர்கோவிலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு..

image

நாகர்கோவில் மாநகராட்சித் துணைமேயர் மேரி பிரின்சி லதா, வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைமையிடம் அவர் தனது மனுவை முறைப்படி வழங்கினார். மாநகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றி வரும் அவர், தற்போது சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!