News February 16, 2025

இந்த ஆப் போதும்… டிரெயின் Updates டக்குனு தெரியும்..!

image

டிரெயின் டிக்கெட் புக் பண்ணிட்டு, அதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுவதை பலருக்கும் தெரியாமலே போய்விடுகிறது. ஆனால், இந்த ஒரு ஆப் இருந்தால் போதும், உங்களுக்கு அனைத்து தகவலும் கிடைத்து விடும். NTES ஆப்பில் டிரெயின் லேட்டாக வருவது, எந்த ரயில் நிலையத்தில் இருக்கிறது போன்ற விஷயங்களும் உடனுக்குடன் update ஆகிறது. அதேபோல, ஒரு டிரெயின் திடீரென ரத்தானாலும், உடனே அறியலாம். இது மத்திய அரசின் ஆப்பாகும்.

Similar News

News March 18, 2026

புதுச்சேரி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி யுகாதி திருநாளை முன்னிட்டு மாநில மக்களுக்கு, குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது, புதுச்சேரியின் தனிச்சிறப்பு என அவர் பாராட்டினார். மேலும், இந்த திருநாளில் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருக வேண்டும் என வாழ்த்தினார்.

News March 18, 2026

Chef – Cook.. இருவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

image

பலரும் இந்த இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான் என நினைக்கிறோம். ஆனால் Chef- Cook இருவருக்கும் வித்தியாசம் உள்ளது *Chef என்பவர் சமையலறையின் மேலாளர். புதிய உணவுகளை உருவாக்குதல், மெனுவை வடிவமைத்தல், சமையலறை ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார் *Cook என்பவர் சமையல்காரர். செஃப் வகுத்த உணவு செய்முறைகளை பின்பற்றி சமையல் & அது தொடர்பான வேலைகளை செய்து முடிப்பவர்.

News March 18, 2026

தேர்தல்களில் CPI கடந்து வந்த பாதை

image

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPI, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. *1989-13(அதிமுக+), *1991-10(திமுக+), *1996-13(திமுக+), *2001-8(அதிமுக+), *2006-10(திமுக+), *2011-11(அதிமுக+), *2016-25(மக்கள் நலக்கூட்டணி), *2021-6(திமுக+), *2026-5(திமுக+). இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?

error: Content is protected !!