News February 16, 2025

வணிகர் சங்க பேரமைப்பின் மாநில நிர்வாகி நியமனம்

image

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணைச் செயலாளராக காயல்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் காயல் அகமது சாஹிபு என்பவரை மாநில தலைவர் ரவி நியமித்து அறிவித்துள்ளார். அவருக்கு மண்டல தலைவர் கோடீஸ்வரன், தெற்கு மாவட்ட தலைவர் வேலாயுத பெருமாள் மற்றும் பேரமைப்பின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 7, 2026

தூத்துக்குடி: தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

image

கோவில்பட்டி அருகே கடலையூர் பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (60) என்பவர் கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். மேலும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தும் குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

தூத்துக்குடியில் சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள்

image

மளவர்நத்தத்தை சேர்ந்தவர் பொன இசக்கி. இவர் இவரது மனைவியை 2013-ல் வெட்டி கொலை செய்தார். இதற்கு பழிக்கு பலியாக கடந்த 2014-ல் பொன் இசக்கி மனைவியின் சகோதரர்களான கால்வாயை சேர்ந்த முருகன், சங்கரன் சேர்ந்து பொன் இசக்கி, அவரது தந்தை நங்கமுத்துவை வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் முருகன், சங்கரனுக்கு இரட்டை ஆயுள் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News March 7, 2026

தூத்துக்குடி இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு ஆதித் தமிழர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தொழில் ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் பயிற் பெற விரும்பும் இளைஞர்கள் தாட்கோ இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!