News March 29, 2024

திமுக – பாஜக இடையே தான் போட்டி

image

இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரையும் இணைத்து ஆட்சியை தக்கவைத்தது பாஜக தான் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் அவர், சிறுபான்மையினர் ஓட்டுக்காக கூட்டணியில் இருந்து இபிஎஸ் வெளியேறியதாக சாடினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக போட்டியிலேயே இல்லை என்றும், தேர்தலில் திமுக – பாஜக இடையே தான் போட்டி நிலவுவதாகவும் அவர் கூறினார்.

Similar News

News August 31, 2025

சிக்கன், முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மொத்த சந்தையில் சிக்கன் விலை கடந்த வாரத்தைவிட இந்த வாரம் மாற்றம் கண்டுள்ளது. கறிக்கோழி ஒரு கிலோ ₹97-க்கு விற்பனையாகிறது. முட்டைக்கோழி கடந்த வாரம் ₹107-க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ₹99-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்து ₹5.15-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சிக்கன் ₹180 முதல் ₹210 ஆக உள்ளது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன?

News August 31, 2025

27 விமானங்கள் லேட், 4 விமானங்கள் டேக் டைவர்சன்!

image

நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் மழையால் சென்னையில் 27 விமானங்கள் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் 12 விமானங்கள், சென்னையிலிருந்து புறப்படும் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதன் காரணமாக பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். குறிப்பாக கோலாலம்பூர், இலங்கை, துபாய், குவைத் விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சென்னைக்கு வந்த 4 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

News August 31, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி

image

அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என EPS தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 கட்டங்களாக 118 தொகுதிகளில் நடைபெற்ற பரப்புரையில் 100 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக EPS கூறியுள்ளார். மேலும், BJP உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்ல அறிவுறுத்திய அவர், பாமக, நம்முடன்(அதிமுக) வருவது உறுதி என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!