News February 16, 2025
தேசிய கல்விக் கொள்கையை திணிக்கக் கூடாது: அன்புமணி

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாநில அரசின் உரிமைகளை மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு நிதி வழங்குவது மத்திய அரசின் கடமை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 22, 2025
வக்கீல்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம்

TN மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல்களுக்கு ‘999’ என்ற புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்டுக்கு ₹999 செலுத்தினால் மட்டும் போதும். இதில், விபத்து மருத்துவ செலவுக்கு ₹3 லட்சம், எதிர்பாராமல் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் ₹25 லட்சம், விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இதற்கு <
News October 22, 2025
எங்கெங்கு எவ்வளவு மழை?

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 5.30 வரை அதிகபட்சமாக புதுச்சேரி காலாப்பட்டில் 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 21 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 10 செ.மீ மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
News October 22, 2025
தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்புகள் குறைவு!

வங்கக்கடலில் தற்போதைய நிலவரப்படி புயல் உருவாக வாய்ப்பில்லை என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. இது வட தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் என்பதால், அப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.