News February 16, 2025

மருத்துவரின் மனைவிக்கு 6 மாதம் சிறை தண்டனை

image

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜெயக்குமாரின் மனைவி உமாதேவி, சங்கர்கணேஷ் என்பவரிடம் 2021ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் கடனாக பெற்றார். கடனுக்காக வங்கி காசோலையை உமாதேவி, வழங்கியுள்ளார். வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டதால் தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக சங்கர் கணேஷ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உமா தேவிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.

Similar News

News January 14, 2026

ராணிப்பேட்டை: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 312 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாதம் ரூ.35,400 சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க ஜன.29ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 14, 2026

ஆற்காடு அருகே அட்டூழியக் கொள்ளை!

image

ராணிப்பேட்டை: ஆற்காட்டை அடுத்த எசையனூர் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதில் 20 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 14, 2026

ராணிப்பேட்டை: முட்புதரில் சிக்கிய சிறுவன்!

image

மருதாலம் அடுத்த கசத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரி. இவரது மகன் லிங்கேஷ், அங்குள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற மாணவன் கடந்த ஜன.12ஆம் தேதி இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அவனைத் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள முட்புதரில் படுத்து தூங்கியதை அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்து மாணவனை மீட்டு நேற்று(ஜன.13) பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!