News February 16, 2025
வைரலாகும் எம்.பி கனிமொழியின் பதிவு

தூத்துக்குடி எம்.பி கனிமொழி இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இந்தியில் எழுதப்பட்ட ‘தமிழ்நாடு’ என்பதை கருப்பு மை மூலம் அழிக்கும்படி பதிவிட்டுள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்காத தமிழ்நாட்டிற்கு நிதி தரமுடியாது என்று ஒன்றிய அமைச்சர் கூறிய விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 13, 2025
தூத்துக்குடியில் நாளை மின்தடை அறிவிப்பு

தூத்துக்குடி பீச் ரோடு துணைமின் நிலையத்தில் நாளை (13.08.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இனிகோ நகர், ரோச் காலனி, சகாயபுரம், மினி சகாயபுரம், மாதா தோட்டம், கடல் சார் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தெற்கு பீச் ரோடு, உப்பள பகுதிகள், லயன்ஸ் டவுன், சுனோஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
தூத்துக்குடி: உங்க ஊரு தாசில்தார் நம்பர் இருக்கா..!

தூத்துக்குடி மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
தூத்துக்குடி- 94450 00680
திருவைகுண்டம்- 94450 00681
திருச்செந்தூர்- 94450 00682
சாத்தான்குளம் – 94450 00683
கோவில்பட்டி – 94450 00684
ஓட்டப்பிடாரம் – 94450 00685
விளாத்திகுளம் – 94450 00686
எட்டையபுரம் – 94450 00687
*ஷேர் பண்ணுங்க*
News August 13, 2025
தூத்துக்குடி பைனான்ஸ் நிறுவனத்தில் துணிகர கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் சாலையில் உள்ள ஸ்ரீ முருகன் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று இரவு நேரத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ரூ.7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போனதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.