News February 16, 2025

சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் நிவின் பாலி!

image

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிவின் பாலியின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தெறிக்கவிட்டுள்ளது. ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம்தான், இந்தியாவின் முதல் ‘மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ’ படம் என்பது குறிப்பிடத்தக்கது. டைரக்டர் ஆதித்யன் சந்திரசேகரன் எழுதி இயக்கும் இப்படம், அதிரடி, நகைச்சுவை கலந்த சூப்பர் ஹீரோ படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 12, 2026

போர் முடிவுக்கு வர ஒரே வழி இதுதான்: ஈரான்

image

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் போர் நிலைமை குறித்து விவாதித்ததாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பிராந்திய அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதிபூண்டுள்ளது என்றார். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி என்றும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

News March 12, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News March 12, 2026

திமுகவின் பகல் கனவு பலிக்காது: GK வாசன்

image

தேர்தலுக்கு முன்பே NDA வெற்றி கூட்டணியாக உலா வந்து கொண்டிருக்கிறது என GK வாசன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், திமுக மீதான PM-ன் குற்றச்சாட்டுகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றார். வாக்குறுதியை நிறைவேற்றாத, சட்ட ஒழுங்கை சீர்குலைத்த திமுகவிற்கு எதிராக எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!