News February 16, 2025
ஐஃபோன் புது லுக்.. எப்படி இருக்கு?

பிரிமீயம் மொபைல் வடிவமைப்பாளரான ஆப்பிளின் புது சீரிஸ் iPhone 17 இப்படித்தான் இருக்கும் என பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. செப். 2025இல் நடக்கும் அறிமுக விழாவுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், புது சீரிஸ் போனில் சிம் ட்ரே இருக்காது எனவும் 5G சிப் உடன் போன் வரலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல புதிதாக Air என்கிற வெர்சனும் அறிமுகமாகலாம்.
Similar News
News September 17, 2025
சோக மரணம்.. உதயநிதி நேரில் அஞ்சலி

கரூரில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், கட்சியின் முன்னோடி உறுப்பினரான குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், விருதை பெறும் முன்னரே உடல் நலக் குறைவால் அவர் மறைந்தது கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது வீட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், சிவராமன் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
News September 17, 2025
டிகிரி போதும்.. மத்திய அரசில் ₹47,600 சம்பளத்தில் வேலை!

Union Public Service Commission-ல் காலியாக உள்ள 213 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலைக்கேற்ப டிகிரி, சட்டத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும். சம்பள விகிதம்:₹47,600 முதல் ₹1,18,500 வரை. இதற்கு வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News September 17, 2025
மோடி தாயாரின் AI வீடியோவை நீக்க கோர்ட் உத்தரவு

PM மோடியை அவரது தாயார் திட்டுவது போன்ற AI வீடியோவை, பிஹார் காங்கிரஸ் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடியின் தாயாரை காங்கிரஸ் அவமதித்துவிட்டதாக பாஜகவினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக பாஜகவினர் பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த AI வீடியோவை உடனடியாக நீக்க காங்கிரஸுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.