News February 16, 2025
அதிமுக பெண் MLAவின் எக்ஸ் பக்கம் ஹேக்

மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அதிமுகவின் மரகதம் குமரவேல். அவர் தனது தொகுதி பணி, கட்சிப் பணி உள்ளிட்ட தகவல்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், அவரது எக்ஸ் பக்கம் திடீரென ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அந்த பக்கத்தில் வெளியாகும் பதிவுகள் தனது பதிவுகள் அல்ல, அதை நம்ப வேண்டாம் என்று மரகதம் குமரவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 29, 2025
தி.மலை: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

1. SSC கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.
News December 29, 2025
ரஜினி, அஜித்தை முந்திய PR

2025-ல் அதிகம் வசூல் செய்த படங்களில் ஏஜிஎஸ், வெற்றி உள்ளிட்ட பல தியேட்டர்களில் பிரதீப் ரங்கநாதனின் ’டிராகன்’ முதலிடம் பெற்றுள்ளது. இந்தாண்டு ரஜினியின் கூலி, அஜித்தின் விடாமுயற்சி, GBU, சூர்யாவின் ரெட்ரோ, தனுஷின் குபேரா, இட்லிகடை, SK-ன் மதராஸி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்கள் வெளியாகின. ஆனால் அதையும் தாண்டி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் PR நடித்த டிராகன் அதிகம் வசூல் செய்துள்ளது.
News December 29, 2025
கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனம் இந்த பெண் சிங்கம்!

டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் சீமா தாகா, கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு அதிரடி காட்டியுள்ளார். இந்த ஆபரேஷனில் பல கடத்தல்காரர்கள், கொலைகாரர்களை தீரத்துடன் எதிர்கொண்டு வாகை சூடியுள்ளார். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலனவர்கள் கட்டிட தொழில் செய்யும் கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள். இந்த பெண் சிங்கத்தின் தீரத்தை பாராட்டி கான்ஸ்டபிளில் இருந்து ASI-ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.


