News February 16, 2025

மாநகராட்சி மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 

image

சி.எம்.ஆர். சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 4 (தெற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி தலைமையில் வரும் பிப்.18ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆணையாளர், துணை மேயர், மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். எனவே பொதுமக்கள் பங்கேற்று குறைகளை மனுக்களாக அளித்து நிவர்த்தி செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. *ஷேர்

Similar News

News March 6, 2026

மதுரை: 710 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை

image

பிளஸ் டூ தேர்வு மார்ச் 2ம் தேதி ஓங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கிலம் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து 16,471 மாணவர் 18,033 மாணவியர் உள்பட மொத்தம் 34,504 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வை 16,069, மாணவர் 17,725 மாணவியர், மொத்தம் 33,794 பேர் மட்டும் தேர்வு எழுதினர். 544 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

News March 6, 2026

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை

image

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ஜிப்மர், இஎஸ்ஐ நிறுவனங்களில் நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கு நர்சிங் அதிகாரி ஆட்சேர்ப்பு பொது தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. மொத்தம் 2551 பணியிடங்கள்; இதில் மதுரை எய்ம்ஸ்-ல் 30 இடங்கள் உள்ளன. (GNM டிப்ளமோ அல்லது B.Sc Nursing தகுதி வேண்டும். வயது 18–30. சம்பளம் ரூ.9,300–34,800. கணினி வழித்தேர்வு) கடைசி தேதி 16.03.2026. <>LINK<<>> SHARE பண்ணுங்க.

News March 6, 2026

மதுரை: வயலுக்குள் கவிழ்ந்த அரசு பஸ்

image

வாடிப்பட்டியில் இருந்து சோழவந்தான் செல்லும் பாதையில் அரசு பஸ் டிப்போ அமைந்துள்ளது. காலை டிரைவர் மகாலிங்கம் பஸ்சை எடுத்து வெளியே வந்தவர் நிறுத்திவிட்டு சாமி கும்பிட கீழே இறங்கி உள்ளார். எஞ்சின் ஓடி கொண்டிருந்ததால் பஸ் தானாக கிளம்பி எதிரே இருந்த தடுப்பு சுவரை தாண்டி வயல்வெளியில் தலைகீழாக கவிழ்ந்தது. டெப்போவில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக கிரைன் மூலம் பஸ்சை வெளியில் எடுத்தனர்.

error: Content is protected !!