News February 16, 2025
பத்து ரூபாய் தியாகி பாலாஜி.. ஜெயக்குமார் பதிலடி

இபிஎஸ் எங்கு ஒளிந்துள்ளார் என <<15479299>>செந்தில் பாலாஜி <<>>விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுக மூத்தத் தலைவர் ஜெயக்குமார், இபிஎஸ் கடந்த ஆண்டே தனது பதிலை அறிக்கையாக வெளியிட்டு விட்டார். அன்றைய தினம் புழல் சிறையில் இருந்ததால் “அஞ்சு கட்சி அமாவாசை” பத்து ரூபாய் தியாகி பாலாஜிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என தாம் கருதுவதாக சாடியுள்ளார்.
Similar News
News March 5, 2026
மகளிர் உரிமைத் தொகை.. மேலும் 2 மகிழ்ச்சி செய்தி

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், முதல் அறிவிப்பாக இது குறித்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், புதிய பயனாளிகளுக்கான விண்ணப்பம் எப்போது விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
News March 5, 2026
விஜய் வாங்கி கட்டிக்கொள்வார்: ஜெயக்குமார்

எழுதி கொடுத்த ஸ்கிரிப்டை சிறப்பாக பேசும் ஒரு நடிகராகவே விஜய்யை பார்க்க வேண்டும் என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒரு ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வது மிகவும் ஈஸி எனக் கூறிய அவர், விமர்சனம் என்ற பெயரில் விஜய் தங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்கொள்வார் என எச்சரித்துள்ளார். மேலும், அரசு பணத்தை எவ்வளவு வாரி இரைத்தாலும் திமுக வெற்றிபெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.


