News February 16, 2025
காதலியுடன் ஆஸி. வீரர் விரைவில் திருமணம்

நீண்ட நாள் காதலி எமிலி ரெட்வுட்டை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் விரைவில் திருமணம் செய்யவுள்ளார். எமிலி ரெட்வுட் கையில் மோதிரம் அணிவித்து கேமரூன் திருமணத்தை நிச்சயம் செய்துள்ளார். இந்த படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 பேரும் பகிர்ந்துள்ளனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்காக விளையாடும் கேமரூன், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
Similar News
News March 20, 2026
போரில் இஸ்ரேல் வெற்றிபெற போகிறது: நெதன்யாகு

ஈரானுடனான போரில் தாங்கள் வெற்றிபெற போவதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததை விட முன்னதாகவே போர் முடிவுக்கு வரும் எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவை போரில் இஸ்ரேல் <<19412334>>இழுக்கவில்லை <<>>என்றும், இருவருமே ஈரானை குறி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என யாராவது சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 20, 2026
ரயிலில் இரவு 10 – காலை 6 மணி ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

*இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை (Tier 3 AC, Sleeper) உபயோகிக்க வேண்டும் *ஷார்ட் சர்க்யூட்டை தவிர்க்க இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்கள் Off-ல் இருக்க வேண்டும் *இரவு 10 மணிக்கு மேல் அதிகமான சத்தத்துடன் பேசவோ, பாடல்கள் கேட்கவோ கூடாது *தேவையில்லாத போது மின் விளக்குகளை Off செய்ய வேண்டும் *உங்கள் டிக்கெட்டை TTE உடனடியாக செக் செய்யலாம்.
News March 20, 2026
இறப்பதை விட இருந்து போராட வேண்டும்: சீமான்

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் சிவா உயிரிழந்தது மிகுந்த மனவேதனை தந்ததாக சீமான் தெரிவித்துள்ளார். இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள் இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதை இனிவரும் தலைமுறையினருக்கு சொல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறந்தவரின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் சீமான் கூறியுள்ளார்.


