News March 29, 2024
ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
Similar News
News April 13, 2025
குடும்ப ஐஸ்வர்யம் அருளும் திருத்தணி முருகர்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகும். நாளை தமிழ் புத்தாண்டு அன்று முருகனை வணங்கினால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் கிட்டுமாம். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News April 13, 2025
திருவள்ளூரில் இன்று இயற்கை வேளாண் சந்தை

திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் அறிவிப்பின் பேரில், இன்று திருவள்ளூர் உழவர் சந்தையில் இயற்கை வேளாண் சந்தை துவங்கவுள்ளது. காய்கறி, பழம், மரச்செக்கு எண்ணெய், பாரம்பரிய அரிசி, தேன், பனை வெல்லம் உள்ளிட்டவை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்தை, ஒவ்வொரு மாதத்தின் 2வது ஞாயிறு காலை 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க