News February 16, 2025
இந்தியாவிற்கான ₹182 கோடி நிதியை நிறுத்திய USA

இந்தியாவில் தேர்தல்களில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்கும் திட்டத்திற்கான ₹182 கோடி நிதியை நிறுத்துவதாக USA அறிவித்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்று வந்த நிலையில், இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், வங்கதேசம், நேபாள், கம்போடியா நாடுகளுக்கான சிறப்பு திட்ட நிதிகளையும் நிறுத்தியுள்ளது. இதற்கு முன்பும், பல நாடுகளுக்கான நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
Similar News
News March 9, 2026
திமுகவை காங்கிரஸ் மிரட்டியுள்ளது: EPS

திமுக என்ற மக்கள் விரோத ஆட்சியை அடிப்படையிலிருந்து அகற்ற வேண்டும் என்று ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று கூடி NDA கூட்டணி அமைத்துள்ளோம் என EPS தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், அதிமுக பாஜகவுக்கு அடிமை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்; காங்கிரஸ் திமுகவை அடிமையாக்கி கூட்டணி வைத்த சம்பவத்தை யாரும் மறக்கவில்லை என்றார். திமுகவை மிரட்டி 28 இடங்களை காங்கிரஸ் வாங்கியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.
News March 9, 2026
CINEMA 360°: ஆஸ்கர் விருது விழாவில் பிரியங்கா சோப்ரா

*பிப்.16-ம் தேதி நடைபெறும் 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்க உள்ளார். *’ஆரோமலே’ படத்தில் நடித்த சிவாத்மிகா ராஜசேகர் ஆக்சன் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். *தெலுங்கானாவில் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து கோர்ட் உத்தரவு. *கடந்த 8 நாட்களில் ‘தாய் கிழவி’ திரைப்படம் உலகளவில் ₹42 கோடி வசூல் செய்துள்ளது.
News March 9, 2026
இரவில் விஜய்க்கு கிடைத்த அதிர்ச்சி!

விஜய் – சங்கீதா விவாகரத்து தவெக கட்சிக்குள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் கண்டனம் தெரிவித்தது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? என்றும், வருங்கால தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடாதீர்கள் எனவும் விஜய்யை அவர் எச்சரித்துள்ளார்.


