News March 29, 2024
ஆங்கில தேர்வை புறக்கணித்த 754 பேர்

கடந்த 26-ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று ஆங்கில பாட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மதுரை மாவட்டத்தில் உள்ள 488 பள்ளிகளில் பயிலும் 38 ஆயிரத்து 340 மாணவ, மாணவிகள் எழுதினர். தனித்தேர்வர்களாக 474 பேர் தேர்வு எழுதினர். மேலும் 515 மாணவர்கள், 239 மாணவிகள் என மொத்தம் 754 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 17, 2025
மதுரை: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

மதுரை மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000449, 9445000450, 8870678220) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 17, 2025
மதுரையில் 1,777 பேர் ஆப்சென்ட்

மதுரையில் நேற்று நடந்த ஆசிரியர் தகுதி தேர்வு டெட் தாள் 2 தேர்வில் 1777 பேர் ஆப்சென்ட் ஆகினர். மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். 52 மையங்களில் தேர்வு நடந்தது, 13 ஆயிரத்து 23 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. போலீஸ் பரிசோதனைக்கு பின் மையங்களுக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
News November 17, 2025
மதுரை மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி பவன்குமார் 22 மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 4ம் ஆண்டு படித்தார். தல்லாகுளம் பகுதியில் தங்கியவர். சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று மாலை இறந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.


