News February 16, 2025

அதானி, அம்பானி, டாடா முதலில் என்ன செய்தனர்?

image

கௌதம் அதானி முதன்முதலில் 1988ல் பிவிசி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து எரிசக்தித்துறை, உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் கால்பதித்தார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், ஆடை உற்பத்தியில் தொழிலைத் தொடங்கியது. அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, 1980களில் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் யூனிட்டை தொடங்கினார். டாடா குழுமம் முதன்முதலில் ஸ்டீல் உற்பத்தியில் தொழில் தொடங்கியது.

Similar News

News March 3, 2026

கனடாவிடம் யுரேனியம் வாங்கும் இந்தியா!

image

அரிய வகை கனிமங்கள் துறையில் இந்தியா-கனடா இடையே வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. PM மோடி – கனடா PM மார்க் கார்னி முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவின் அணுசக்தி தேவைக்காக, ₹24,000 கோடி மதிப்பிலான யுரேனியத்தை 2035 ஆண்டு வரை கனடா வழங்கும். இதன் மூலம், இந்தியாவில் உள்ள அணு உலைகளுக்கு யுரேனியம் தட்டுப்பாடு ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

News March 3, 2026

இன்று மாலை 3:20-க்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க..

image

‘பிளட் மூன்’ எனப்படும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளது. நிலா அடர் ஆரஞ்ச் நிறத்தில், நீல விளிம்புடன் ஒளிரவுள்ளது. சென்னையில் இந்த கிரகணத்தின் இறுதி பகுதி மட்டுமே தெரியுமாம். மாலை 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:47 மணி வரை நிலா ரத்த சிவப்பு நிறத்தில் ஒளிரவுள்ளதாம். தொலைநோக்கி வழியாக இந்த கிரகணத்தை மக்கள் கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 3, 2026

தவெகவுடன் காங்கிரஸா? செல்வப்பெருந்தகை

image

தவெகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக வெளியாகும் தகவலுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். தவெகவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச கட்சித் தலைமை, மாநிலத் தலைவரான தன்னிடம் இதுவரை எந்த அறிவுறுத்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், பின்வாசல் அரசியல் செய்ய வேண்டிய அவசியமும் தங்களுக்கு இல்லை என்ற அவர், திமுகவுடனே கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளோம் என்றார்.

error: Content is protected !!