News February 16, 2025
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி போதும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கிளிக் செய்யவும். மார்ச்4 கடைசி தேதி.
Similar News
News January 15, 2026
திருப்பூரில் கேஸ் புக் பண்ண புது வழி!

திருப்பூர் மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News January 15, 2026
அவிநாசி அருகே 4 வயது சிறுமி உயிரிழப்பு

ஆரியக்கவுண்டன்பாளையத்தில், விசைத்தறி வேலைக்குச் செய்யும் கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் – பானுமதி தம்பதி. இவர்களது 4 வயது மகள் புகழினி தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கினர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்; இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 15, 2026
காங்கேயம் அருகே விபத்து: ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம், பவானியில் இருந்து காங்கேயம் வழியாக பழனிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அப்போது காங்கேயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் சென்ற போது, எதிரே வந்த கார் அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த அரச்சலூர் அருகே வடபழனி பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவர் உயிரிழந்தார்.மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


