News February 16, 2025
EPS எங்கு பதுங்கி உள்ளார்? செந்தில் பாலாஜி

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசு கூறிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டாமா எனவும், இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என கூறிய அண்ணாவின் பெயரை, ஒளிந்து கொண்டிருக்கும் பழனிசாமி விட்டுவிட வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News December 29, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.29) 22 கேரட் கிராமுக்கு ₹80 குறைந்து ₹13,020-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,04,160-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம், இந்த வாரம் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18699156>>சர்வதேச சந்தையில் தங்கம் விலை<<>> சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News December 29, 2025
விஜய்யை கூட்டணிக்கு அழைத்த வானதி சீனிவாசன்

NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு <<18692245>>தமிழிசை<<>> நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசனும் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி என்பதே பொது எதிரியை வீழ்த்தத்தான் என்ற அவர், திமுகவை சேர்ந்தே வீழ்த்தலாம் என்று விஜய்யை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரிவினையை ஏற்படுத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
News December 29, 2025
மாபெரும் உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை 4 முறை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். அவர் 2018(1,291 ரன்கள்), 2022(1,290 ரன்கள்), 2024(1,659 ரன்கள்) & 2025-ல்(1,703 ரன்கள்) அதிக ரன்களை விளாசியுள்ளார். யாரும் இச்சாதனையை 2 முறைகூட செய்ததில்லை. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில்(2024 & 2025) அதிக ரன்களை விளாசிய ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.


