News February 16, 2025
காசி தமிழ்ச் சங்கம் சிறப்பு ரயிலுக்கு வரவேற்பு

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்க விழாவை முன்னிட்டு கோவையில் இருந்து புறப்பட்டு சேலம் வந்த காசி தமிழ்ச் சங்க சிறப்பு ரயிலுக்கு பா.ஜ.க.வின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் சசிகுமார், பா.ஜ.க.வின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் மாநில தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலத்தில் இருந்து 60-க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் சிறப்பு ரயிலில் சென்றனர்.
Similar News
News March 3, 2026
சேலம்: பட்டாவில் பெயர் திருத்தம் செய்யனுமா?

சேலம் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.
News March 3, 2026
சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 3, 2026
ஆத்தூரில் பாஜக நிர்வாகிக்கு சிறை!

சேலம் விநாயகபுரத்தைச் சேர்ந்த பாஜக கல்வியாளர் பிரிவு மாவட்டத் தலைவர் மெடிக்கல் குமார், ஜே.ஜே. நகர் வேலுசாமியிடம் ₹3 லட்சம் கடன் பெற்று வழங்கிய காசோலை போதிய பணமின்றி திரும்பியது. இதுகுறித்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் மெடிக்கல் குமாருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்தது.


