News February 16, 2025
டெல்லி நெரிசல்: பயத்தில் பயணிகள்…

டெல்லி ரயில் நிலையத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் மிரட்சியுடன் தெரிவிக்கின்றனர். கும்பமேளாவுக்காக பிஹாரின் சாப்ராவில் இருந்து ரயில் ஏற வந்த ஒரு பயணி, தாயை இழந்துள்ளார். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மூச்சுத் திணறி பலர் மயங்கியதாக அந்த பயணி கண்ணீர்விட்டபடி கூறினார். ரயில்கள் தாமதமும் நெரிசலுக்கு காரணம் என்கிறார் மற்றொரு பயணி.
Similar News
News January 16, 2026
ஜாக்கிசான் பொன்மொழிகள்

*வாழ்க்கை நம்மை கீழே தள்ளும், மீண்டும் எழ வேண்டுமா இல்லையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். *அமைதியாக இருப்பதும், எதுவும் செய்யாமல் இருப்பதும் வேறுவேறு விசயங்கள். *நான் ஏன் ஜாக்கி சான் ஆனேன்? ஏனெனில் பெரும்பாலான மனிதர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது நான் மிகவும் கடினமாக உழைக்கிறேன். *நான் ஒருபோதும் அடுத்த புரூஸ் லீ ஆக இருக்க விரும்பவில்லை. முதல் ஜாக்கி சானாக மட்டுமே இருக்க விரும்பினேன்.
News January 16, 2026
பட வாய்ப்புகள் குறைந்ததா? கடுப்பான ARR

1990-களில் தான் சிறந்த இசையை கொடுத்ததாக பலரும் தன்னிடம் வந்து சொல்வதாக AR.ரஹ்மான் தெரிவித்துள்ளார். அப்படியென்றால், இப்போது நான் சிறப்பான இசையை வழங்கவில்லையா என முட்டாள்தனமான கேள்வி எழுகிறது. பாலிவுட் படமான ‘ராமயானா’, சொந்த இசைக் குழு, மணி ரத்னம் படங்கள் என கமிட்மெண்ட் நிறைய இருப்பதால், குறைவான படங்களுக்கு மட்டும்தான் தற்போது இசையமைக்கிறேன் என்றும் அவர் காட்டமாக தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 582 ▶குறள்: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். ▶பொருள்: நண்பர், பகைவர், நடுநிலையாளர் ஆகிய எல்லாரிடத்திலும் நிகழும் எல்லா நிகழ்வுகளையும், எல்லாக் காலங்களிலும் ஒற்றரைக் கொண்டு விரைவாக அறிந்து கொள்வது அரசுக்குரிய கடமையாகும்.


