News February 16, 2025
சலுகை வழங்க உறவினர்களிடம் ‘ஜிபே’ வசூல்; காவலர் சஸ்பெண்ட்

மதுரை சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்க அவர்களின் உறவினர்கள் மூலம் சிலரது ‘ஜிபே’ மூலம் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை சிறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட சிறைகளிலும் சில காவலர்களும் வசூலில் ஈடுபட்டுள்ளனர். தேனி காவலர் ஒருவர் கைதிக்கு அலைபேசி கொடுத்து உறவினர்களிடம் பேச உதவியதற்கு ‘ஜிபே’ மூலம் ரூ.5ஆயிரம் பெற்றுள்ளார். இதன் காரணமாக அவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
Similar News
News October 22, 2025
மதுரை: பட்டாசு விபத்து மருத்துவமனையில் 25 பேர் அனுமதி

மதுரை தீபாவளி அன்று காலை 7:00 மணி முதல் நேற்று (அக். 21) காலை 7 மணி வரை பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்த ஒரு பெண் உள்பட 30 க்கு மேற்பட்டோர், மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்தனர் இவர்களில் 25 பேர் தீவிர சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சை தீக்காய பிரிவுகள் சிகிச்சை பெறுகின்றனர். ஒரு சிறுவனுக்கு விரல் நுனி துண்டாகி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, மூன்று பேர் கண் மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
News October 22, 2025
மதுரை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை.. APPLY NOW.!

மதுரை மக்களே BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி படித்து 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விரும்புவோர் <
News October 22, 2025
மதுரை: வெடி வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம்..சிறுவன் பலி

திருமங்கலம் உச்சபட்டியை சேர்ந்த ரவிக்குமார் மகன் ரிஷிதரன் 7 அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்தார். தீபாவளியையொட்டி நேற்று நண்பர்களோடு உச்சப்பட்டி மருதகாளி கோவிலில் அருகே வெடி வைத்துவிட்டு ஓடிய போது திறந்து கிடந்த தொட்டிக்குள் தவறி வந்த விழுந்த போது உள்ளே கிடந்த கண்ணாடி பாட்டில்கள் அவர் மீது குத்தியதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.


