News February 16, 2025
கோயில் பணியாளர்களுக்கான குடியிருப்பு வளாகம்

நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரூ7.19 கோடி மதிப்பீட்டில் புதியதாக பணியாளர்கள் குடியிருப்பு கட்டும் பணிக்கான தொடக்க விழாவினை காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 17 திங்கட்கிழமை 10 மணிக்கு கிரீன் பார்க் பள்ளி அருகில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நடைபெற உள்ளது.
Similar News
News August 19, 2025
முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ. 2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.99 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
News August 19, 2025
நாமக்கல்லில் நாளை முதல் இலவசம்!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு, நாளை (ஆக.20) மாலை 4 மணிக்கு, நடைபெறுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 04286-222260 என்ற தொலைபேசி மூலமோ, அல்லது இ-மெயில் மூலமோ அல்லது மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க..!
News August 19, 2025
யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் யூரியா உரத்தினை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். உரத்துடன் மற்ற இணை பொருட்களான நுண்சத்துகள், உயிர்ம ஊக்கிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது. மீறினால் உரக் கட்டுப்பாட்டு ஆணை-1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.