News February 16, 2025
கணினி மூலம் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்

பூந்தமல்லயில் உள்ள அரசு பார்வைத்திறன் குறைபாடு பள்ளியில், 18 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வுக்கு தயார். பாரம்பரிய முறையில், ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுதியும் தேர்வு நடைபெறும். ஆனந்த் என்ற மாணவர், கணினி மூலம் தனியாக எழுதி தமிழகத்திலேயே முதலாவதாக சாதனை படைத்துள்ளார். இதற்காக, அவர் 2 ஆண்டுகள் கடின பயிற்சி பெற்றார். முன்பு, மத்திய பாடத்திட்டத்தில் 2 மாணவர்கள் இவ்வாறு தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 3, 2026
திருவள்ளூர் கலெக்டரிடம் 633 மனுக்கள்!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 2) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 181, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 76, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 109, வேலைவாய்ப்பு வேண்டி 32, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 25, இதர துறைகள் சார்பாக 210 என மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News March 3, 2026
JUST IN: திருவள்ளூர் திமுக கவுன்சிலர் அதிரடி கைது

திருவள்ளூர் 6ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகர், டெல்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது, விமானத்தில் இருந்த பணிப்பெண்ணிடம் மது போதையில் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை அருகில் அமரச் சொல்லி, மேலே கை வைத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக கவுன்சிலர் பிரபாகர், அவரது நண்பர் தியாகு ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News March 3, 2026
திருவள்ளூரில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


