News February 16, 2025

‘SK 23’ பட டீசர் தேதி லீக் ஆனது

image

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு ‘SK 23’ படத்தின் டீசர் நாளை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், கன்னட நடிகை ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ₹100 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Similar News

News March 6, 2026

BREAKING: கவர்னர் RN ரவி மாற்றம்!

image

தமிழக கவர்னராக இருந்த RN ரவி மேற்குவங்க கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்குவங்க ஆளுநராக இருந்த <<19306734>>ஆனந்த போஸ் தனது பதவியை ராஜினாமா<<>> செய்த நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

News March 6, 2026

PhonePe-ல் பயோமெட்ரிக் முறை

image

UPI பேமெண்ட்க்கு பயோமெட்ரிக் முறையை PhonePe அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை PIN மட்டுமே செயல்பாட்டில் இருந்த நிலையில், இனி Fingerprint அல்லது Face recognition வைத்து பேமெண்ட் செய்யலாம். இந்த பயோமெட்ரிக் முறை ₹5000 வரை பரிவர்த்தனைக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் PhonePe செயலி இருந்தால் உள்ளே சென்று பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி பாருங்க.

News March 6, 2026

சஞ்சு சாதனை… ஆர்ச்சர் வேதனை!

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார். அதில் 7 சிக்சர்களும் அடங்கும். இதன்மூலம் டி20 WC வரலாற்றில் அதிக சிக்சர்கள்(16) அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அதேசமயம், டி20 WC நாக் அவுட் போட்டியில் 50+ ரன்களை வாரி வழங்கிய பவுலர் எனும் மோசமான சாதனையை இங்கிலாந்தின் ஆர்ச்சர் (61 ரன்கள்) படைத்துள்ளார்.

error: Content is protected !!