News February 16, 2025
171 யூனிட் மணல் ஏலம் விட முடிவு

எஸ்.பி.பட்டினம் அருகே முள் வேலி அடைக்கப்பட்டிருந்த இடத்தில் மணல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து மருங்கூர் குரூப் வி.ஏ.ஓ ரேணுகா புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்தனர். கனிம வள உதவி இயக்குநர் விஜயகுமார், திருவாடானை தாசில்தார், போலீசார் மணல் குவியலை பார்வையிட்டனர். இதில் 171 யூனிட் மணல் இருப்பது தெரிந்து ஏலம் விட ஆர்.டி.ஓ விற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஏப்.21) முதல் மூன்று நாட்களுக்கு மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் பிற்பகல் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் குறிப்பாக பரமக்குடி, அபிராமம், கமுதி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் மேற்கு பகுதி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என ராமநாதபுரம் காலநிலை அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
இராமநாதபுரம் பெண்கள் கவனத்திற்கு

இராமநாதபுரம்: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
பக்ரைன் நாட்டில் உயிரிழந்த இராம்நாடு மீனவர்

பாம்பன் காமராஜர் நகரை சேர்ந்த சீமோசன்(33) என்பவர் மீன்பிடி தொழிலுக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பக்ரைன் நாட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு செல்சியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். எனவே உயிரிழந்த மீனவர் உடலை சொந்த ஊர் கொண்டுவர அவரது மனைவி தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.