News February 16, 2025

ஏர்போர்ட்டில் தங்கம் பறிமுதல்.. கோர்ட் புதிய உத்தரவு

image

உடலில் அணிந்து வரும் நகைகளை சுங்க வரி விதிக்கப்படுவதற்கான உடைமைகளாகக் கருத முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து 135 கிராம் எடையுள்ள 10 வளையல்கள், 88 கிராம் தாலிச்சங்கிலி அணிந்திருந்ததாகக் கூறி சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். வெளிநாடுகளிலிருந்து வருவோர் தங்கம் எவ்வளவு கொண்டு வரலாம் என்பதை அறிய <<15476981>>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.

Similar News

News March 4, 2026

மாதம்பட்டி ரங்கராஜிடம் DNA டெஸ்ட் நடத்த அனுமதி!

image

திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக <<18207032>>ஜாய் கிரிசில்டா<<>> தொடர்ந்த வழக்கில் சென்னை HC உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடலில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு (DNA) பரிசோதனை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், பரிசோதனைக்கு பிறகு மத்தியஸ்தரிடம் அவர் அறிக்கையை சமர்ப்பிக்கவும் HC தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

News March 4, 2026

நிதிஷ்குமார் CM பதவியில் இருந்து விலகலா?

image

பிஹார் CM பொறுப்பில் இருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை அவர் ராஜ்யசபா MP தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்க்கு மத்தியில் முக்கிய அமைச்சரவை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமாருக்கு DCM பதவி வழங்கப்படலாம் எனவும் தெரிகிறது. பிஹார் அரசியலில் ஏற்பட உள்ள இந்த அதிரடி மாற்றங்கள் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

News March 4, 2026

தனிக்கட்சி தொடங்கினார்.. இபிஎஸ் அதிர்ச்சி

image

‘புரட்சி அதிமுக’ என்ற புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி தொடங்கியுள்ளார். புரட்சி என்பது MGR, ஜெயலலிதாவை குறிக்கும் என தெரிவித்த அவர், தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைப்பை முன்னெடுத்த இவர், OPS திமுகவில் இணைந்ததால் அதிமுகவுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனிக்கட்சி தொடங்கியது EPS-க்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

error: Content is protected !!