News February 16, 2025
கிருஷ்ணகிரியில் போட்டோகிராபி வீடியோகிராபி இலவச பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பாக வருகின்ற பிப்ரவரி 19-ம் தேதி முதல் கேஆர்பி அணை பகுதியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் 30 நாட்கள் இலவச போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சி வழங்கப்பட உள்ளது ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர் மேலும் தொடர்புக்கு – 94422 47921 தொடர்பு கொள்ளவும்.
Similar News
News April 21, 2025
கிருஷ்ணகிரியில் வாட்டி வதைக்கும் வெயில்

கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
News April 21, 2025
கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேர் கைது

ஓசூர் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் அடவிசாமிபுரம், நல்லூர் கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்த காமையூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 32), கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த கணேசன் (70) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.