News February 16, 2025
லாரி மீது டூவிலர் மோதியதில் ஒருவர் பலி

ஆத்தூர் அருகே செண்பகத் தோப்பு விளையைச் சேர்ந்தவர் ஜோயி டேவிஸ் (27). இவர் இருசக்கர வாகனத்தில் பயணம் பகுதியில் சென்ற போது சாலை ஓரத்தில் நின்ற டாரஸ் லாரியின் பின்பக்கத்தில் மோதி படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
குமரி: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…
News November 6, 2025
குமரி: 310 சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் லாரி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுருளகோடு வெட்டு திருத்திகோணத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது கேஸ் சிலிண்டர் லாரி ரப்பர் தோட்டத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.இதில் லாரி டிரைவர் மணிகண்டன் உயிர் தப்பினார். குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் லாரியிலிருந்து சிலிண்டரை அப்புறப்படுத்தி லாரியை மீட்டனர்.
News November 6, 2025
குமரி: பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவ்ர் டெய்லர் லதிகா (49). இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு கண்ணுமா மூடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பளுகல் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


