News February 16, 2025

நடிகர் சத்யராஜின் மகளுக்கு திமுகவில் உயரிய பொறுப்பு

image

அண்மையில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் குன்னம் ராஜேந்திரன், கே.வி.எஸ். சீனிவாசன் ஆகியோர் வர்த்தகர் அணி துணை செயலாளர்களாகவும், மருதூர் ஏ.ராமலிங்கம் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News January 18, 2026

மாணவர்களுக்கு விடுமுறை.. கூடுதல் பஸ்கள் இயக்கம்

image

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் சிரமமின்றி சென்னை திரும்ப ஏதுவாக இன்று 5,192 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உடனடியாக <>TNSTC<<>> வெப்சைட் (அ) செயலியில் டிக்கெட் புக் செய்யுங்கள். உங்கள் உறவுகள், நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 18, 2026

சற்றுமுன்: விஜய் அறிவித்தார்

image

ஜனவரி 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. TN மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் வளர்ச்சியையும் நோக்கமாக கொண்டு அறிக்கை தயாரிக்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திமுகவும், அதிமுகவும் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்து வருவதால், விஜய்யும் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு தேர்தல் அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

News January 18, 2026

திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை: ரகுபதி

image

திமுக கூட்டணி உடையும் என்ற சிலரின் எதிர்பார்ப்பு நிறைவேறாது என அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் எந்த குழப்பமும் கிடையாது என்றவர், காங்கிரஸ் தங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது எனவும் அனைவரையும் அரவணைப்பதே CM ஸ்டாலினின் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!