News February 16, 2025

பிரபல நகைக்கடையில் திருடிய பெண் கைது

image

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில், ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிா்வாகி சீனிவாசன் (35) சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்திருந்தாா். போலீசார் கேமராக்களை ஆய்வு செய்து, சின்னக்காஞ்சிபுரம் பல்லவா்மேடு பகுதியைச் சேர்ந்த ரமாதேவி (48) என்பவரை கைது செய்தனா். திருடிய ரூ.2.5 லட்சம் மதிப்புடைய வைர வளையல் உள்ளிட்டவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

Similar News

News August 13, 2025

காஞ்சிபுரம்: மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

சிங்காடிவாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

வாலாஜாபாத், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின் திட்டமுகாம்” நடைபெற்றது. இம்முகாமை கலெக்டர் கலைசெல்வி மோகன், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இம்முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்த கொண்டு மனு அளித்தனர்.

News August 13, 2025

காஞ்சிபுரம்: நாக தோஷம் விலக இங்கு போங்க!

image

காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் குமரகோட்டம் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் முருக பெருமானை போற்றியே கந்தபுராணத்தை கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள் இயற்றினார் என்பது சிறப்பாகும். இக்கோயிலில் செவ்வாய் கிழமை மற்றும் கிருத்திகை தினங்களில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால், திருமணத்தடை, நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம். (SHARE)

error: Content is protected !!