News March 29, 2024

என்னை நினைத்து என் தாய் பெருமைப்படுவார்

image

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வீரர் ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். ஆட்டநாயகன் விருது வென்ற அவர், தனது தாயை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். என் அம்மா இங்கே இருக்கிறார். கடந்த 3-4 ஆண்டுகளாக என் தடுமாற்றங்களைப் பார்த்தவர் அவர். நிச்சயம் இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார் என்று தெரிவித்தார்.

Similar News

News March 19, 2026

உங்க ஊருக்கும் இப்படி ஒன்னு கண்டிப்பா இருக்கும்..

image

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் இருப்பதை போன்று, அந்த ஊரை கண்டறிவதற்கும் ஒரு அடையாளம் கண்டிப்பாக இருக்கும். அது ஒரு கோயில், கடை, பஸ் ஸ்டாப் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உதாரணமாக மலைக்கோட்டையை பார்த்துவிட்டால், திருச்சிக்கு வந்துவிட்டோம் என்ற ஃபீல் அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வந்துவிடும். அதேபோல், உங்கள் ஊர் வந்துவிட்டதை எதை வைத்து கண்டறிவீர்கள்? உங்கள் ஊரின் அடையாளத்தை கமெண்ட் பண்ணுங்க.

News March 19, 2026

எப்படி இருக்கிறது ‘யூத்’? Full review & Rating

image

லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணனும் என ஸ்கூல் படிக்கும் போது லவ்வரை தேடும் கென், படிப்பில் கவனமில்லாமல் இருக்கிறார். அவருக்கு காதல் கிடைத்ததா? படிப்பு என்னவானது? இதுவே ‘யூத்’ *பிளஸ்: கென் நல்ல ஆக்டிங். எமோஷனல் சீனில் சூரஜ், தேவதர்ஷினி கைத்தட்ட வைக்கிறார்கள். ஒளிப்பதிவும், GV-ன் இசையும் அசத்தல். இன்டர்வெல் சூப்பர். பல்ப்ஸ்: ஸ்கூல் காட்சிகள் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்துகிறது. Rating: 2.25/5.

News March 19, 2026

FLASH: தங்கம் விலை ₹15,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

தங்க நகைப் பிரியர்களுக்கு மார்ச் மாதம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இம்மாதத்தில் மட்டும் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹15,000 குறைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200 ஆக இருந்த 1 சவரன், தற்போது ₹1,11,200-க்கு விற்பனையாகி வருகிறது. சவரனுக்கு மேலும் ₹10,000 வரை விலை குறைய வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காப்பது நல்லது!

error: Content is protected !!