News February 16, 2025
இந்த உணவுகளை மீண்டும் சுட வைத்து சாப்பிடுகிறீர்களா?

இரவு சமைத்த உணவு மீதம் இருந்தால், அதனை சுடவைத்து மீண்டும் சாப்பிடும் வழக்கம் நம் வீடுகளில் அதிகம். ஆனால் சில உணவுகளை இவ்வாறு சுடவைத்து சாப்பிடும் போது, அதில், நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, கடல்சார் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு, fried rice போன்றவற்றை நிச்சயமாக சுடவைத்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News October 25, 2025
Biopic எடுத்தால் இவர்கள் வேடத்தில் யார் நடிக்கலாம்?

ஒருவரின் வாழ்க்கையை தழுவியோ (அ) அப்படியாகவோ சினிமாவாக எடுப்பதே Biopic என அழைக்கப்படுகிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் வெளியான சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல்வாதிகளின் பயோபிக் படங்களை வலதுபக்கம் swipe செய்து பாருங்கள். தற்போதைய சூழலில் MK ஸ்டாலின், EPS, கி.வீரமணி, விஜயகாந்த், திருமாவளவன், அண்ணாமலை ஆகியோரது அரசியல் பயணத்தை பயோபிக்காக எடுத்தால் யாரை நடிக்க வைக்கலாம் என்று கமெண்ட் பண்ணுங்கள்.
News October 25, 2025
நவம்பர் 4: பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS

பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நவ.4-ம் தேதி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில்கொண்டு தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் அறிவிக்க உள்ளார்.
News October 25, 2025
இந்தியா Vs பாக்.: எல்லையில் இரு ராணுவங்களும் பயிற்சி

பாக்., எல்லை அருகே சர் கிரீக் பகுதியில் வரும் 30-ம் தேதி முதல் நவ.10 வரை முப்படைகள் பயிற்சி நடத்த உள்ளன. சர் கிரீக் பகுதியில் பாக்., ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவதாக கூறப்படும் நிலையில், இந்தியா பயிற்சி மேற்கொள்ள உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக வரும் 28, 29-ம் தேதிகளில் பாக்., தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அந்நாடு பயிற்சி (அ) ஆயுத சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


