News February 16, 2025
உங்கள் பணத்தை சேமிக்க உதவும் ஈசி டிப்ஸ்!

*நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்பதை ட்ராக் செய்வது அவசியம். இதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறித்த கணக்குகளை அறியலாம் *உங்களின் வருமானத்தில் EMI 40% தாண்டாமல் இருப்பது அவசியம் *ஒரே வருமான ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருக்காமல் கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் *குறுகிய காலச் சேமிப்பை சரியாக செய்து முடியுங்கள். அது உங்களை மேலும் சேமிக்க தூண்டும். SHARE IT.
Similar News
News September 12, 2025
வீட்டில் பச்சிளம் குழந்தை இருக்கா? கவனமா இருங்க!

10 மாதம் தவமிருந்து பெற்ற குழந்தையை பேணி பாதுகாப்பது பெற்றோரின் கடமை. மகாராஷ்டிராவில் 7 மாத குழந்தை, கீழே கிடந்த சாக்லேட்டை எடுத்து சாப்பிட, அது தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தவழும் வயதில் எதை பார்த்தாலும், குழந்தைகள் வாயில் எடுத்து போட்டுக் கொள்ளும் பழக்கம் கொண்டிருப்பார்கள். ஆனால், விழிப்புடன் இருக்க வேண்டியது பெற்றோர்கள்தான். இதனை அனைவரும் ஷேர் பண்ணுங்க.
News September 12, 2025
RECIPE: ஹெல்தியான வரகரிசி தட்டை!

சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வரகரிசி உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். அதோடு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் மொறு மொறு வரகரிசி தட்டை Recipe இதோ.
*கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரைத்து மசாலாவாக ரெடி செய்யவும்.
*இத்துடன் வரகரிசி மாவு & உளுத்தம் பருப்பு மாவு & உப்பு சேர்த்து சிறிய தட்டைகளாகத் தட்டவும்.
*அதை எண்ணெயில் பொரித்தெடுத்தால், சுவையான வரகரிசி தட்டை ரெடி. SHARE IT.
News September 12, 2025
கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து விருந்து

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி, அடுத்தடுத்து 3 நாடுகளுடனான தொடரில் விளையாடவுள்ளது. அக்.2 – அக்.14 வரை, வெஸ்ட் இன்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட்களில் விளையாடுகிறது. இதனையடுத்து, அக்.19 – நவ.8 வரை ஆஸி.,யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 ODI, 5 T20 போட்டிகளில் களம் காண்கிறது. தொடர்ந்து, 2 டெஸ்ட், 3 ODI, 5 T20 கொண்ட தொடரில் தெ.ஆ., அணியுடன் மோதுகிறது. இதில் நீங்கள் விரும்பும் தொடர் எது?