News February 16, 2025

கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி

image

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் இருசக்கர வாகனத்தில் திருச்சி நோக்கி பிரபாகர் மற்றும் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவர் ஓட்டிச் சென்றனர். அப்போது அவர்களது பைக் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி மீது மோதியது. இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் பிரபாகர் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதியுள்ளது.

Similar News

News March 9, 2026

திண்டுக்கல்லிற்கு அறிவித்தார் அமைச்சர்!

image

தமிழக முதலமைச்சர் ஆலோசனையின்படி, திண்டுக்கல் – தேனி புறவழிச்சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டையில் 5 ஏக்கரில் ‘மினி டைடல் பார்க்’ அமைக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்துள்ளார். இதனால் திண்டுக்கல், தேனி மாவட்ட இளைஞர்கள் வேலைக்காக சென்னை, கோவை செல்ல வேண்டிய அவசியமிருக்காது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 9, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் (மார்ச் 8) இரவு 10 மணி முதல் (மார்ச் 9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 8, 2026

திண்டுக்கல்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!