News February 16, 2025
பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து

மதுரையில் இருந்து நேற்று (பிப்.15) முதுகுளத்தூர் சென்ற தனியார் பேருந்து மானாசாலை அடுத்துள்ள ஊசிலங்குளம் தனியார் பேப்பர் மில் அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இந்த பேருந்தில் பயணம் செய்த மாயவேரி பூசாரியான ராமசாமி (72) என்பவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது.
Similar News
News October 22, 2025
மழை பாதித்த பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

மண்டபம் பேரூரில் நேற்றிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர் நகர், கலைஞர் நகர் பகுதிகள் மழை நீரில் சூழ்ந்தன. இங்கு தேங்கிய தண்ணீர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. இப்பகுதிகளை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார். மீட்பு பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். பேரூர் தலைவர் ராஜா உடன் சென்றார்.
News October 21, 2025
ராம்நாடு: மழை பாதிப்பு புகார் எண் வெளியீடு.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் உட்பட சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மவாட்டத்திற்கென பிரத்தியகமாக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 21, 2025
BREAKING: ராமநாதபுரத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது. என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம்,விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.