News February 16, 2025
பைக் மீது ஆம்னி பஸ் மோதி ஒருவர் பலி

தென்காசி, சிவகிரி அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (45). டீ கடை நடத்தி வந்தார். நேற்று இரவு பைக்கில் ரெட்டியார்பட்டி சாலையில் சென்றபோது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வழியாக பெங்களூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் பைக் மீது மோதியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனால் சிவகிரி – ராஜபாளையம் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Similar News
News March 4, 2026
தென்காசி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

தென்காசி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <
News March 4, 2026
தென்காசி: பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு; 4 பேர் கைது.!

ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் கடந்த ஆண்டு டிச., மாத இறுதியில் வீட்டை பூட்டி விட்டு திருச்செந்தூர் சென்ற நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 14 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நடந்து வந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவர், சக்திவேல், மணிகண்டன், ராஜ்குமாா் ஆகியோருடன் திருட்டியது தெரியவந்துள்ளது.
News March 4, 2026
செங்கோட்டை – நெல்லை ரயில் தற்காலிக ரத்து

இன்று மார்ச் 4 ம் தேதி மற்றும் 6 ம் தேதி ஆகிய இரு தினங்களுக்கு செங்கோட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில், சேரன்மகாதேவியில் நிறுத்தப்படும். நெல்லையிலிருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும் நெல்லை – சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் நடைமேடை பராமரிப்பு பணி காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


