News February 16, 2025

சேலம்: இளம்பெண் பாலியல் பலாத்காரம்… கைது!

image

சேலம், தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் மேட்டுமாரனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (36), கல் உடைக்கும் தொழிலாளி. இவர் 2010ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை நேற்று கிருஷ்ணகிரி அருகே தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 16, 2025

சேலம்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சேலம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இங்கு <>கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணை அறிந்து அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

சேலம்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

சேலம் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய எளிய வழி. உங்கள் போனில் TamilNilam Geo-Info என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் தொடர்பு எண்ணை பதிவு செய்யவும். பின் நிலம் இருக்க கூடிய மாவட்டம், வட்டம், கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து நிலத்தின் பட்டா விவரம், FMB, லொக்கேஷன் உள்ளிட்ட பல விவரங்களையும் அறிய முடியும். யாருக்காவது தேவைப்படும் SHARE பண்ணுங்க!

News December 16, 2025

சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி, கட்டுமானம், நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். SHARE IT

error: Content is protected !!