News February 16, 2025
கடவுளை ஏன் பூக்களை வைத்து வணங்குகிறோம்?

கடவுளை வணங்கும் போது, பூக்களை வைத்தே வணங்குகிறோம். இது ஏன் என்ற கேள்வி எழுந்ததுண்டா? இந்துபுராணங்களின் படி, அனைத்து கடவுள்களும் பூக்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பூக்களின் நறுமணம் கடவுள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது ஐதீகம். மேலும் , பூக்களைச் சமர்பிப்பதன் மூலம், ஒருவருக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செய்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.
Similar News
News March 24, 2026
பாஜக வளர்ந்தால் வளரட்டும்: பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறது என்ற கருத்தை EPS தவிடுபொடி ஆக்கியிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். அதிமுகவை விழுங்க பாஜக நினைக்கவில்லை, அந்த அளவிற்கு அதிமுக சிறிய கட்சி இல்லை என்ற அவர், 27 தொகுதிகளை மட்டுமே வைத்துள்ள பாஜக எப்படி ஆட்சி அமைக்கும் எனவும் கேட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்தால் வளரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 24, 2026
புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுச்சேரியில் 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 1.வில்லியனூர்- சிவா, 2.மங்கலம்- ரங்கன், 3.திருபுவனை- அங்காளன், 4.பாகூர்- செந்தில்குமார், 5.முதலியார்பேட்டை- சம்பத், 6.உப்பளம்- அனிபால்கென்னடி, 7.உருளையன்பேட்டை- கோபால், 8.நெல்லித்தோப்பு- கார்த்திகேயன், 9.ராஜ்பவன்- விக்னேஷ் கண்ணன், 10.காலாப்பட்டு- செந்தில் (எ) ரமேஷ், 11.கதிர்காமம்- வடிவேலு, 12.காரைக்கால் தெற்கு- நாஜிம், 13.நிரவி- நாக தியாகராஜன்.
News March 24, 2026
10 நாள்களில் ₹14,000 குறைந்த தங்கம்!

தங்கம் விலை 10 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹14,000 குறைந்துள்ளது. தற்போது சென்னையில் 1 சவரன் <<19461962>>₹1,04,000-க்கு<<>> விற்பனையாகிறது. விலை ஏற்ற இறக்கத்தில் இருப்பதால் மக்கள் தற்போது தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக பேசிய நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, தங்கம் வாங்க இது சரியான நேரம் எனவும், வரும் நாள்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


