News February 16, 2025
சம்பளம் ஒழுங்கா கொடுக்க மாட்றாங்க: SK

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான், படம் வெளியாவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சம்பளத்தை கொடுத்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பல தயாரிப்பு நிறுவனங்கள் சரியாக சம்பளம் கொடுப்பதில்லை எனவும், படம் வெளியாகும் போது பாதி சம்பளத்தை பிடிங்கிவிட்டு போவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். SK மட்டுமல்ல VJS உள்ளிட்ட பல ஹீரோக்கள் தங்கள் பட ரிலீஸின் போது சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
Similar News
News March 4, 2026
₹1,88,70,00,00,00,000 ஒரு மாதத்துக்கு செலவா?

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் மட்டுமே அமெரிக்கா சுமார் ₹6,900 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் ஒரு மாதத்திற்கு தொடரலாம் என டிரம்ப் எதிர்பார்ப்பதால், மொத்த செலவு ₹18.87 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ‘USS Gerald R Ford’ என்ற விமானம் தாங்கிக் கப்பலின் பராமரிப்புக்கு மட்டும் ஒரு நாளைக்கு ₹58 கோடி செலவாகிறதாம்.
News March 4, 2026
ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி: விஜய்

தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக என தஞ்சை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என அனைத்து அணிகளையும் தவெக அடித்து நொறுக்கும் என்ற அவர், தனக்கும் மக்களுக்கும் இருப்பது எலெக்ஷனால் ஏற்பட்ட பந்தம் அல்ல, இது எமோஷனால் ஏற்பட்ட பந்தம் என்றார் . மேலும், ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
தங்கம், வெள்ளி விலை.. ₹20,000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை <<19293862>>சவரனுக்கு <<>>₹2,120 குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ₹20 குறைந்து ₹295-க்கும், கிலோ வெள்ளி ₹20,000 குறைந்து ₹2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹30,000 குறைந்துள்ளது.


