News February 16, 2025
அதிமுக பல அணிகளாக உடையும்: மார்க்சிஸ்ட் கட்சி

அதிமுக பல அணிகளாக உடையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இபிஎஸ்க்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், அதிமுக மீண்டும் பல அணிகளாக உடைய வாய்ப்பு இருப்பதாகவும், இதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News March 11, 2026
திருமணத்தை மீறிய உறவு.. சிக்கிய இன்னொரு நடிகர்

கேரள அமைச்சரும், நடிகருமான KP கணேஷ்குமார், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவரின் மனைவி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து KP கணேஷ்குமார், தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற பல விஷயங்கள் வரும்; இதற்கு முன்பும் தனது வீட்டில் இருந்து பிரச்னை வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும், காதல் ஒன்றும் குற்றம் கிடையாது; தனக்கு ஒன்றல்ல, 5,000 காதல் உறவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 11, 2026
இந்த Headphone-களின் விலையை கேட்டா தலை சுத்தும்!

பாட்டு கேட்க ஒரு ஹெட்போன் இருந்தால் போதும் என்ற காலகட்டம் மாறி, தற்போது Fashion Statement ஆகவும், பொருளாதார அந்தஸ்தாகவும் ஆகிவிட்டது ஹெட்போன்கள். இதனாலேயே, லட்சக்கணக்கில் காசை வாரி இறைத்து ஹெட்போன் வாங்க சிலர் தயாராக இருக்கின்றனர். அப்படி உலகிலேயே மிகச் சிலர் மட்டுமே பயன்படுத்தும் டாப் 5 எக்ஸ்பென்சிவ் ஹெட்போன்களை அறிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. நீங்கள் பயன்படுத்தும் ஹெட்போனின் விலை என்ன?
News March 11, 2026
விஜய்யை பாஜக முடித்துவிடும்: கொங்கு ஈஸ்வரன்

நிதிஷ்குமாரைப் போல இந்த தேர்தலில் EPS-ஐயும், அடுத்த தேர்தலில் விஜய்யையும் பாஜக காலிசெய்துவிடும் என நினைத்ததாக ஈஸ்வரன் கூறியுள்ளார். NDA-ல் விஜய்யை இணைக்க முயற்சிப்பதாக வரும் தகவல்களை பற்றி பேசிய அவர், போகிற போக்கை பார்த்தால் வரும் தேர்தலிலேயே விஜய்யையும் பாஜக முடித்துவிடும் என தெரிகிறது என்றார். மேலும், இது மட்டும் நடந்தால் TN-ல் பாஜக காலூன்ற இவர்கள் உதவுவது தெரிந்துவிடும் என பேசியுள்ளார்.


