News February 16, 2025
கண்ணமங்கல கண்மாயில் மீன்பிடித் திருவிழா

வகுத்தெழுவன்பட்டி கண்ணமங்கல கண்மாயில் தண்ணீர் வற்றியதால் தண்ணீர் மீண்டும் நிரம்பி முழுமை பெற வருண பகவானை வேண்டும் விதமாக மழை வரம் வேண்டி நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது கண்மாய் கரையில் நின்று ஊர் பெரியவர்கள் வெள்ளை வீச அங்கு காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.இதில் கெழுத்தி, கட்லா உள்பட போதிய அளவு மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
Similar News
News October 26, 2025
சிவகங்கை: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல்<
News October 26, 2025
சிவகங்கையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை ஐகோர்ட் : 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 26, 2025
சிவகங்கை: ரயிலில் சிக்கிய மாடு: பாலத்தின் நடுவே நிறுத்தம்

மானாமதுரை வழியாக திருச்சிக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது.நேற்று மாலை 4:30 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் கிளம்பியது. அண்ணாதுரை சிலை ரயில்வே கேட் பகுதியில் பசு மாடு ஒன்றின் மீது மோதி ரயிலின் அடியில் சிக்கி ஆறு ரயில்வே மேம்பாலத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீசார், ஊழியர்கள் வந்து இறந்த பசுமாட்டை அகற்றிய பிறகு ரயில் 1மணி நேரம் தாமதத்திற்கு பிறகு கிளம்பி சென்றது.


