News February 16, 2025
CSK ரசிகர்களுக்கு HAPPY NEWS

ஐபிஎல் 18ஆவது சீசன், மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பையை எதிர்கொள்கிறது. இது தொடர்பாக ESPN வெளியிட்டுள்ள தகவல்படி, CSK-MI மோதும் 3ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா (ஈடன் கார்டன்), 2ஆவது போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் (HYD) அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 2, 2025
தமிழை பற்றி பேசும் தகுதி மோடிக்கே உண்டு: நயினார்

தமிழை பற்றி பேசும் தகுதி PM மோடி ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ஐநா சபைக்கு போனாலும் சரி, அயோத்திக்கு போனாலும் சரி தமிழை பற்றி மட்டுமே மோடி பேசுவதாகவும் கூறியுள்ளார். பிஹாரிகளை திமுக அரசு துன்புறுத்துவதாக மோடி கூறிய நிலையில், இது தமிழர்களை அவமதிக்கும் செயல் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
News November 2, 2025
லெனின் பொன்மொழிகள்

*நாத்திகம் என்பது பொதுவுடைமையின் இயல்பான மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும்.
*பிழைகள் மற்றும் தோல்விகள் இல்லாமல் கற்றல் ஒருபோதும் நிகழ்வதில்லை.
*நம்பிக்கை நல்லதுதான், ஆனால் கட்டுப்பாடு சிறந்தது.
*அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய்க்கூட உண்மையாகிவிடுகிறது.
*பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு.
*அச்சத்தை விட ஆபத்தை ஒரு முறையாவது சந்திப்பது மேலானது.
News November 2, 2025
காந்திக்கு பிறகு மோடி தான்: RN ரவி

காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் PM மோடி தான் என்று கவர்னர் RN ரவி கூறியுள்ளார். மோடியின் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளதாகவும், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகவும் ரவி தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாவோயிஸ்ட்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வரும் நேரத்தில், நாடு பின்தங்கி இருந்ததாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?


