News February 16, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மே மாதத்திற்குள் புதியவர்கள்

1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் மேலும் சிலர் புதிதாக இணைய காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், மே மாதத்திற்குள் புதியவர்களை சேர்க்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News October 27, 2025
இந்தியாவை விட பாகிஸ்தான் முக்கியம் அல்ல: USA

இந்தியாவின் நட்பை விட்டுக்கொடுத்து, பாகிஸ்தானுடன் USA நட்பு பாராட்டாது என அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் USA நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு உறுத்தலாக இருக்கலாம், ஆனால் பல நாடுகளுடன் நட்பு வைத்துக்கொள்வது அவசியமாகிறது என்றார். மேலும், இந்தியாவுடனான USA-வின் நட்பு ஆழமானது, முக்கியமானது மற்றும் வரலாற்று சிறப்பு மிக்கது எனவும் கூறியுள்ளார்.
News October 27, 2025
Sports Roundup: ஓய்வு பெற்றார் ஷோபி டிவைன்

*நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஷோபி டிவைன் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு.
*இன்று தொடங்குகிறது சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள்.
*ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார் சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்கிக்.
*ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் தமிழகம் – ஹைதராபாத் மோதல்.
News October 27, 2025
தீபாவளிக்கு அதிக வசூலை ஈட்டிய விஜய்யின் TOP 5 படங்கள்

தீபாவளி என்றாலே பெரிய ஸ்டார்களின் படம்தான். அதிலும் விஜய் படங்கள் ரிலீஸ் என்றால் Family audience கூட தியேட்டருக்கு சென்று பார்ப்பார்கள். இந்த தீபாவளிக்கு விஜய்யின் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், இதுவரை தீபாவளிக்கு ரிலீஸ் ஆன விஜய் படங்களிலேயே அதிக வசூலை சில படங்கள் ஈட்டியுள்ளன. அதில் டாப் 5 படங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. விஜய் ரசிகர்களுக்கு SHARE பண்ணுங்க.


