News February 16, 2025
உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு மேலும் ₹560 உயர்வு

தங்கம் விலை இன்று(டிச.26) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹70 உயர்ந்து ₹12,890-க்கும், சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,03,120-க்கும் விற்பனையாகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,920 என தாறுமாறாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News December 26, 2025
சந்தாலி மொழியில் அரசியலமைப்பு வெளியானது

சந்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய அரசியலமைப்பை ஜனாதிபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதனை வெளியிடுவதில் பெருமைக்கொள்வதாக கூறிய அவர், இது அந்த மொழியை பேசும் சமூகத்தினருக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவித்துள்ளார். இம்மொழியை, ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.
News December 26, 2025
தேர்தல் வந்தாலே ‘ICE’-ஐ ஏவும் பாஜக: கனிமொழி

தேர்தல் நெருங்கும்போது ICE ( IT, CBI, ED) அமைப்புகளை களமிறக்குவதை பாஜக வழக்கமான தேர்தல் வியூகமாக வைத்துள்ளதாக கனிமொழி விமர்சித்துள்ளார். TOI-க்கு அளித்த பேட்டியில், பாஜகவின் B டீமாக அதிமுக செயல்படுவதாகவும், அக்கட்சியின் கடைசி ஆண்டாக இந்தாண்டு இருக்காது என நம்புவதாகவும் அவர் கூறினார். திமுகவுக்கு எதிரான விஜய்யின் பேச்சுக்கள் பாஜகவின் தூண்டுதலாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


