News February 16, 2025

8,000 ரன்களை கடந்த ஹர்மன்பிரீத்

image

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணி கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்மன்பிரீத் கவுர், T20 கிரிக்கெட்டில் 8,000 ரன்களை கடந்து சாதித்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், 42 ரன்கள் குவித்ததன் மூலம் அவர், இந்த சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் 8,000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். முதலிடத்தில் ஸ்மிரிதி மந்தனா உள்ளார்.

Similar News

News September 12, 2025

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: இந்தியா

image

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா., சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை மதிப்பதாக தெரிவித்த இந்தியா, தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, 2015, ஜன.9-க்கு முன்பு அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக தங்க இந்தியா அனுமதி அளித்திருந்தது.

News September 12, 2025

உடல் வலுபெற இந்த யோகா காலையில் பண்ணுங்க!

image

*தரையில் நேராக நிற்கவும்.
*பிறகு ஒரு காலை மட்டும் முன்னால் வைத்து, மற்றொரு காலை பின்னால் வைக்கவும்.
*முன் காலின் பாதங்களை ஊன்றி, பின்காலின் விரல்களை மட்டும் ஊன்றி வைக்கவும்.
*2 கைகளையும் மேலே எழுப்பி ஒன்றிணையுங்கள்.
*இந்தநிலையில் 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல, கால்களை மாற்றி செய்யவும்.
அனைத்து தசைகளும் வலுபெற இந்த வீரபத்ராசனம் உதவும்.Share it.

News September 12, 2025

பெரியாரை கற்றதால் திமுகவுக்கு ஆதரவு: திருமா

image

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கி விடும் என்று EPS சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, திமுகவுடன் தான் ஏன் கூட்டணி வைத்தேன் என திருமா தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பெரியாரை பயின்றதால் திமுகவை ஆதரிப்பதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், 2 சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்று சொல்பவர்களால், அந்த சீட்டை கூட வாங்க முடியவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!