News February 16, 2025

மூங்கில் உப்பு.. கிலோ ரூ.30,000!

image

உப்பு என்ன விலை இருக்கும்? கிலோ ரூ.20 முதல் ரூ.200 வரை பிராண்ட் பொறுத்து மாறும். ஆனால் கொரியாவின் மூங்கில் உப்பு கிலோ ரூ.30,000. கடல் உப்பை மூங்கில் தண்டுக்குள் வைத்து 400டிகிரியில் வேக வைக்கின்றனர். இதனை 9 முறை செய்யும்போது உப்பு வைரம் போல மாறிவிடுகிறது. ஒரு கிலோ உப்பு செய்ய 20 நாள்கள் ஆகும். 73 மினரல்ஸ் அடங்கிய இந்த உப்பு உடலின் பல பிரச்னைகளுக்கு மருந்து. இங்கு உத்தரகாண்டில் தயாரிக்கப்படுகிறது.

Similar News

News March 7, 2026

பட்ஜெட் நிதியில் 30% கொள்ளை – விஜய்

image

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய விஜய், “தமிழக பட்ஜெட்டுக்கான நிதியில் 30% முதலமைச்சருக்காக ஒதுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் “காசில்லை காசில்லை என்று கூறிவிட்டு விடியற்காலையில் ரூ.5,000 மக்களுக்கு வழங்கியது எப்படி? ஸ்டாலின் சார் Tax-ஐ ஒழித்தாலே மக்களுக்கு பணத்தை வழங்க முடியும்” என்றார். விஜய்யின் இந்த குற்றசாட்டை நீங்க எப்படி நினைக்கிறீங்க?

News March 7, 2026

விவாகரத்து பிரச்னையை நான் பார்த்துக்கிறேன்: விஜய்

image

முதல்முறையாக விவகாரத்து வழக்கு பற்றி மறைமுகமாக விஜய் பேசியுள்ளார். ஏற்கெனவே உள்ள நிறைய பிரச்னைகளில் சமீபத்தில் மேலும் ஒரு பிரச்னை வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு நீங்கள் போராடி வருத்தப்படுவதை பார்த்து நானும் வருந்துகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன்; நல்லதே நடக்கும் என்றும் தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் விஜய் பேசினார்.

News March 7, 2026

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: விஜய்

image

பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ என்ற திட்டத்தை தங்கள் ஆட்சியில் நிறைவேற்றுவோம் என விஜய் அறிவித்துள்ளார். இதில், மோதிரத்துடன் டிரஸ், சோப் உள்ளிட்டவை அடங்கிய பெட்டகமும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் பாதுகாப்புக்காக வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும், பள்ளிகள், ரேஷன் கடைகளில் இலவச நாப்கின் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!